கனடா நாட்டில், போலீசாரால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி, ஹீரோ போல் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்து, இருக்கும் இடத்தையும் தெரிவித்த நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

திருட்டு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, ஒருவரை போலீசாரால் கைது செய்வதற்காக பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்தனர். மேலும் தொலைக்காட்சிகளிலும் இவரை பற்றிய விளம்பரம் ஒன்றை ஒளிபரப்பி குறிப்பிட்ட அந்த நபரை கண்டால் தங்களுக்கு தெரிவிக்கும்படியும் தெரிவித்தனர்.
இது குறித்து அறிந்த அந்த குற்றவாளி, இந்த விளம்பரம் ஒளிபரப்பான தொலைக்காட்சியை பேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, மிரட்டும் வகையில், எச்சரிக்கை முட்டாள்களே... நான் எட்மன்டன் நகரில் உள்ளேன். உங்களால் என்னை பிடிக்க முடியாது என ஹீரோயிசம் காட்டி சவால் விட்டுள்ளார். இதையடுத்து அவர் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார் இவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர்.