Sep 15, 2018, 4:08 PM IST
இரவு உறங்கும் முன்னர் கடைசியாக பார்ப்பதும் அதே மொபை ஸ்க்ரீனை தான். வீட்டில் மனைவி என்ன செய்கிறார் என்பதை கூட, வாட்ஸப் ஸ்டேட்டஸை பார்த்து தான் தெரிந்து கொள்கின்றார் சிலர் . அந்த அளவிற்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை மொத்தமாக மாற்றி இருக்கின்றன ஸ்மார்ட் ஃபோன்கள்.
கேம்ஸ், சேட்டிங், வீடியோ, என எக்கச்சக்கமான பொழுதுபோக்கு அம்சங்கள் போனில் இருப்பதால் , அதிலேயே தங்களின் பெரும்பாலான நேரத்தை போக்குகின்றனர் மக்கள். இந்த ஸ்மார்ஃபோன் மோகத்திற்கு வயது வித்யாசம் என்பது கிடையாது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயது வாரியாக ஸ்மார்ஃபோன் அடிமைகளாகி இருக்கின்றனர் மக்கள்.
இதனால் சக மனிதர்களிடமும் தங்கள் உறவினர்களுடமும் குறைவான நேரத்தையே செல்வைடுகின்றனர். உண்மையை சொல்லப்போனால் முகநூலுக்கு ஒதுக்கும் நேரத்தை கூட தங்கள் உறவுகளின் முகம் பார்க்க ஒதுக்குவதில்லை சிலர்.
இதே நிலைதால் குழந்தைகளுக்கும். ஸ்மார்ஃபோனில் மூழ்கி இருக்கும் பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவது இல்லை.
மகிழ்ச்சியாக மனம்விட்டு பேசுவது விளையாடுவது என பல நல்ல விஷயங்களை இந்த காலத்து குழந்தைகள் அனுபவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் பகுதியை சேர்ந்த குழந்தைகள், தெருவில் இறங்கி ஸ்மார்ஃபோனுக்கு எதிராக போராடி இருக்கின்றனர்.
இந்த போராட்டத்தின் போது பெற்றோர்களிடம் ஸ்மார்ஃபோனுக்கு செலவிடும் நேரத்தை குறைத்து கொண்டு, தங்களுடன் அதிக நேரம் செலவிடும்படி கோரிக்கை வைத்திருக்கின்றனர் இந்த சுட்டி குழந்தைகள்.
7 வயதான எமிலி எனும் சிறுவனின் தலைமையில் தான் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், இப்படி ஒரு அமைப்பை தொடங்கி போராடி இருக்கின்றனர்.
நிஜமாகவே இது ஒரு வேதனையான தருணம் தான். பெற்றோர்கள் தங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என இந்த ஜெர்மன் குழந்தைகள் மனதில் ஏற்பட்டிருக்கும் ஏக்கம், நம் நாட்டு குழந்தைகளின் மனதிலும் இருக்க தான் செய்கிறது. அவர்கள் தெருவில் இறங்கி விளையாடுவதற்கு முன்னர், பெற்றோர்கள் தான் விழித்து கொள்ள வேண்டும்