நியூசிலாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு 8 நிமிடங்களில் வாபஸ் பெறப்பட்டது.
நியூசிலாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு 8 நிமிடங்களில் வாபஸ் பெறப்பட்டது.
இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், நியூசிலாந்தில் இன்று காலை 9 மணியளவில் ரிக்டர் அளவில் 7.4-ஆக நிலநடுக்கம் பதிவானது. இது கிறைஸ்ட்சர்ச்சின் தெற்கு தீவுகளில் 90 கி.மீ. அளவில் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நியூசிலாந்தின் பல பகுதிகளில் பரவலாக உணரப்பட்டது.
இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக நியூசிலாந்து அரசு அறிவித்தது. இருப்பினும் கடல்பகுதிகளில் ராட்ச அலைகள் எழும்பின. நிலநடுக்க பாதிப்பு காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.