இந்தோனேசியாவில் கியாஸ் லைட்டர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் கியாஸ் லைட்டர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள பின்ஜாய் மாவட்டத்திற்கு உட்பட்ட சம்பிரேஜோ என்ற கிராமத்தில் கியாஸ் லைட்டர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல் ஊாழியர்கள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், திடீரென தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.