உலக நாடுகளுக்கு ஆபத்பாந்தவனாக மாறிய மோடி... சீட்டுக்கட்டாய் சரியும் சீனா தொழிற்சாலைகளை கைப்பற்றும் இந்தியா..!

By Thiraviaraj RMFirst Published Apr 13, 2020, 5:36 PM IST
Highlights
இன்று ஆண்டொன்றுக்கு ஒன்றரை லட்சம் கோடியாக உள்ள மருந்து ஏற்றுமதிகள் இன்னும் சில வருடங்களில் மும்மடங்கு உயரும் வாய்ப்புள்ளது. 
ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ந்த போதுதான் அமெரிக்கா தனது ஆற்றலை பயன்படுத்தி முன்னுக்கு வந்தது, அரபு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் உலக பணம் போக்குவரத்து டாலரில் நடைபெறுவது போன்ற மாற்றங்களை செய்தது.

அதே போல் இந்த கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியா தனது கால்தடத்தை மெல்ல பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரூ.20,000 கோடி மதிப்புள்ள ஆஸ்துமா மருந்து சந்தையை அமெரிக்கா, இந்தியாவிற்கு தற்போது திறந்து விட்டுள்ளது. நாளை வேறு பல மருந்துக்கான சந்தைகளும், பல நாட்டு மருந்து சந்தைகளும் இந்தியாவுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபத்துக் காலத்தில் உற்ற நண்பன் இந்தியாதான் என்று பல நாடுகள் உணர ஆரம்பித்துவிட்டன.

இன்று ஆண்டொன்றுக்கு ஒன்றரை லட்சம் கோடியாக உள்ள மருந்து ஏற்றுமதிகள் இன்னும் சில வருடங்களில் மும்மடங்கு உயரும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் இங்கு வேலை வாய்ப்புகளும் அன்னிய செலாவணியும் மிகப் பெரிய அளவு பெருகும் நல்வாய்ப்பு உண்டு. ஒரு ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து பலவற்றை சரி செய்யும் சஞ்சீவினி மூலிகைதான் போல.

மருந்து சார்ந்த தொழிலில் இப்படிப்பட்ட பொன் வாய்ப்பு இனி வராது. உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சீனாவிடம் இருந்து இன்னும் பல உற்பத்தி துறைகளை இந்தியா பக்கம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திருப்பக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த கொரோனா பிரச்சினை முடிந்து நிறைய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 உலகம் முழுவதும் பொருளாதார வல்லரசு நாடுகள் அனைத்தும் கொரோனாவில் சிக்கி சிதைந்து வருகின்றன 130 கோடி மக்கள்தொகை கொண்ட வளரும் நாடான இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்திற்கு 1 என்ற விகிதத்திலேயே இருக்கிறது.

இந்நிலையில் மற்ற உலக நாடுகள் அனைத்து சீனாவின் மீதும் மிக பெரிய கொந்தளிப்பில் உள்ளன. எப்போது கொரோனா பரவல் முழுவதும் ஒழிக்கப்படுகிறதோ அன்று சீனாவின் அழிவு தொடங்கும் என இப்போதே கணிக்க ஆரம்பித்துவிட்டன. இதனை இந்திய பிரதமர் மோடியும் சரியாக கணித்து கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு நடுவே சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவிற்கு கொண்டுவர பக்காவாக திட்டமிட்டு உள்ளார்.

நேற்று முன்தினம் ஜப்பான் சீனாவில் இருந்து தன்னுடைய நிறுவனங்கள் அனைத்தையும் திரும்ப அழைத்துக் கொண்டு அந்த நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயை சீனாவில் உள்ள ஜப்பான் நிறுவனங்களை இடமாற்றம் செய்வதற்கு மட்டுமே ஜப்பான் ஒதுக்கி இருக்கிறது. சீனாவில் மட்டும் ஜப்பானை சேர்ந்த 13ஆயிரத்து 700 தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

ஜப்பான் இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயுட ன் மோடி தொலைபேசியில் பேசி இருக்கிறார். மோடியின் பேச்சு கொரானா தடுப்பு பற்றி என்றாலும் அதையும் தாண்டி கொரானா முடிந்த பிறகு புதிய தொழில் நுட்பத்துடன் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படுவதை பற்றியே பேசப்பட்டதாக மோடி தன்னுடைய ட்விட்டரில் கூறி இருக்கிறார்.

ஆக சீனாவின் வீழ்ச்சிக்காக காத்து இருந்த இந்தியா அதை சரியாக பயன்படுத்திகொள்ள முனைகிறது என்றே தெரிகிறது. ஜப்பானும், இந்தியாவும் மிக முக்கியமான நட்பு நாடு என்பதாலும் மோடிக்கும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயுக்கும் இடையில் மிக நெருக்கமான நட்பு இருப்பதால் சீனாவில் இருந்து வெளியேறும் தொழிற்சாலைகள் இந்தியாவில் அமையவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் இது வரை 1,441 ஜப்பானிய நிறுவனங்கள் இருக்கின்றன. மோடி இந்திய பிரதமராக வந்த பிறகு சீனாவில் இருந்த ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை 14,400 ல் இருந்து 13,700 ஆக குறைந்து இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவில் 2014 க்கு பிறகுசுமார் 400 ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்து இருக்கின்றன. எனவே சீனாவில் இருந்து காலியாகும் ஜப்பானிய நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் இடம் பெறவே வாய்ப்புகள் உள்ளது.

சீனாவில் இருந்து ஐப்பானிய நிறுவனங்கள் வெளியேறும் போது சீனாவில் பல லட்சம் பேர் வேலை இழக்கும் நிலைஏற்படும். அதே நேரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் நிறுவனங்கள் வரும் போது இந்தியாவில் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
கொரோனா பாதிப்பின் மூலம் சரியும் பொருளாதாரத்தை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள திட்டம் தீட்டிய நிலையில் உலக நாடுகளின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பும் என்றும் சீனா கனவிலும் நிலைத்திருக்காது.

 
click me!