இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வரும் கில்கிட் பால்டிஷ்தானில் சீனா உதவியுடன் பாகிஸ்தான் அணை கட்ட எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வரும் கில்கிட் பால்டிஷ்தானில் சீனா உதவியுடன் பாகிஸ்தான் அணை கட்ட எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது , கில்கிட் பால்டிஷ்தான் ஜம்மு-காஷ்மீரில் ஒருங்கிணைந்த பகுதியே , அதில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை , உடனே ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது . தற்போது சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் வேகவேகமாக திமர் பாஷா என்ற அணையைக் கட்ட முயற்சித்து வருவது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது . தொடர்ந்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் , கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன.
அதுமட்டுமின்றி மறைமுகமாக இந்தியாவை எதிர்க்கும் நோக்கில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியுள்ளதை நாம் கண்கூடக காணமுடிகிறது கடந்த மே- 5 ஆம் தேதி இந்திய-சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இதன் வெளிபாடாகவே கருதப்படுகிறது. அது மட்டுமின்றி - தெற்காசியாவில் தனக்கு போட்டியாக இந்தியா வளர்வதை விரும்பாத சீனா பாகிஸ்தான் துணையுடன் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் கில்கிட் பால்டிஷ்தானில் திமர் பாஷா என்ற அணை கட்ட முயற்சித்து வந்த நிலையில் இப்போது சீனா பாகிஸ்தானுடன் இணைந்துள்ளது . இந்தியாவின் பிரதான நீராதாரமான சிந்து நதியின் குறுக்கேதான் இந்த திமர் பாஷா அணை கட்டப்பட உள்ளது . நதியின் குறுக்கே தடுப்பு ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவின் நீராதாரத்தை தடுக்க முடியும் என கருதுவதால் இதில் சீனா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இரு நாடுகளின் இந்த முயற்சிக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது ,
" இது உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் என்றும் , இந்த அணை கட்டப்பட வேண்டும் என உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர் எனவும் பாகிஸ்தானுக்கு மாற்றாக சீனா இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு பதில் அளித்துள்ளது. சீன நிறுவனமான சீனா பவர் அண்ட் ஃபிரண்டியர் ஒர்க்ஸ் ஆர்கனைசேஷன் (எஃப்.டபிள்யூ.ஓ) உடன் சுமார் 444 பில்லியன் (பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பில்) ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் அரசு கடந்த புதன்கிழமை கையப்பமிட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் வணிகப் பிரிவு FWO இதற்கான அதிகாரப்பூர்வு பணிகளை மேற்கொண்டுள்ளது . பாகிஸ்தான் சீனா இடையே கையொப்பம் ஆகியுள்ள இந்த மெகா ஒப்பந்தத்தை இந்தியா மிகக்கடுமையாக எதிர்த்துள்ளது. இது சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி , எனவே இதுபோன்ற திட்டங்கள் இங்கு நல்லது அல்ல என இந்தியா எச்சரித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, சீனாவும்- பாகிஸ்தானும் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ளூர் மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணைந்துள்ளன. இது உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒப்பந்தமாகும் .
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 60 பில்லியன் டாலர் அதாவது 4 ஆயிரத்து 572 கோடி ரூபாய் செலவில் சிறப்பு பொருளாதார மண்டலமும் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான பாதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்லும் எனவும் தெரிவித்துள்ளார் . இதற்கும் இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது , இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் , கில்கிட் பால்டிஷ்தான் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகின்றன இந்நிலையில் பாகிஸ்தானால் சட்டவிரோதமான ஆக்கிரமிக்கப்பட்ட இந்தப் பிரதேசங்களில் இதுபோன்ற திட்டங்களை இந்தியா எதிர்க்கிறது எனவும் தெரிவித்துள்ளது , பாகிஸ்தான் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்த அணையைக் கட்ட முயற்சித்து வருகிறது , ஆனால் ஒவ்வொரு முறையும் பண நெருக்கடி காரணமாக பின்வாங்கி வந்த நிலையில் தற்போது சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளது . பாகிஸ்தான் எல்லைப்புற பணி அமைப்பில் சீனா 70 சதவீதமும் பாகிஸ்தான் 30 சதவீதமும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .