பாகிஸ்தான் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்த இந்தியாவின் இந்துப்பெண்... நியூயார்க்கில் அதிர வைத்த இளம்பெண்கள்..!

By Thiraviaraj RM  |  First Published Aug 1, 2019, 4:45 PM IST


இந்தியா -பாகிஸ்தானை சேர்ந்த ஹிந்து - முஸ்லீம் பெண்கள் திருமணம் செய்த புகைப்படங்களை வைரலாகி வருகிறது. 


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் திருமணத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் இணையதளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற்காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள் இவை. இந்த புகைப்படங்களை போல மற்றொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. இதில் இருப்பவரில் ஒருவரான அஞ்சலி சக்ரா இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்த சுந்தாஸ் மாலிக். அஞ்சலி சக்ரா இந்து மதத்தை சேர்ந்தவர். சுந்தாஸ் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். பாரம்பரிய உடைகளை அணிந்து, சிரித்தபடியும் முத்தமிட்டும் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். 

Latest Videos

இந்த புகைப்படத் தொகுப்பிற்கு 'நியூயார்க் லவ் ஸ்டோரி' என்று பெயரிட்டு ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவுக்கு 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. மேலும் பல நெட்டிசன்கள் இவற்றை ஷேர் செய்துள்ளனர். 

மேலும் இணையத்தில் பலரும் இந்த  காதல் ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு இருவரின் அழகான புகைப்படத்தையும் புகைப்பட நிபுணர் சரோவர் அஹமத் ஷேர் செய்திருந்தார்.

 

click me!