இந்தோனேஷியா.. மிகவும் சக்திவாய்ந்த புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிப்பு - உருவாகும் புதிய பிரச்சனை!

By Ansgar R  |  First Published Jul 28, 2023, 10:34 PM IST

இதுவரை கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ்களை விட, இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புது வகை வைரஸ் மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.


இந்தோனேசியாவில் தற்போது கண்டறியப்பட்ட இந்த புதிய வகை கோவிட் வைரஸ் மாறுபாடு, இதுவரை பதிவுசெய்யப்பட்ட வைரஸ்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளது. 

அந்த நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதித்தபோது, அந்த வைரஸ் சுமார் 113 தனிப்பட்ட மாற்றங்களை அதாவது Mutationகளை கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதில் சுமார் 37 வகை மாறுதல்கள், மனிதனின் உடலில் உள்ள செல்களின் புரத சத்தை அழிக்கவல்லது என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு நம்மை பயமுறுத்திய omicron வகை கோவிட் வைரஸ் வெறும் 50 வகை தனிப்பட்ட மாற்றங்களை மட்டுமே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

இதுவரை கண்டறியப்பட்ட மிகவும் தனித்துவனமான வைரஸ் தொற்றாக இது இருக்கின்றது என்றும், ஆனால் அது அதிக ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இது பரவினாலும், மீண்டும் உலகளாவிய லாக்டவுன்களுக்கு வழிவகுக்காது என்று உயர்மட்ட வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கிரிப்டோ கரன்சி மூலம் கோடீஸ்வரரான நபர்.. திடீரென மாயம் - ஒரு வாரம் கழித்து துண்டு துண்டாக மீட்கப்பட்ட உடல்!

இந்த புதிய மாறுபாடு குறித்து, ஜூலை மாதம் உலகளாவிய கோவிட் ஜெனோமிக்ஸ் தரவுத்தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புது வகை வைரஸ் நாள்பட்ட தொற்று வழக்கில் இருந்து வெளிவந்ததாக நம்பப்படுகிறது. ஒரு நோயாளி சில வாரங்களுக்குள் தனது உடம்பில் உள்ள வைரஸை தோற்கடிக்க போராடும் போது, நாள்பட்ட நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன, இது பல மாதங்கள் வரை நீடிக்கலாம்.

இத்தகைய நோய்த்தொற்றுகள், எய்ட்ஸ் அல்லது புற்றுநோய் கீமோதெரபிக்கு உட்பட்டவர்கள் போன்ற குறைந்த நோயெதிர்ப்பு உடல் அமைப்புகளைக் கொண்ட நபர்களை அடிக்கடி பாதிக்கின்றன, இதனால் அவர்களால் அந்த வைரஸை திறம்பட எதிர்த்துப் போராட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்டகால நோய்த்தொற்றுகள், விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை வைரஸ் மாற்றங்களை ஊக்குவிக்கும் நிலைமைகளை உருவாக்குகின்றன.

வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லாரன்ஸ் யங் விடுத்த எச்சரிக்கையில், இந்த புதிய வகை வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து பரவுவதால், பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இது இருக்கிறது என்றார். மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கக்கூடிய, வளர்ந்து வரும் இதுபோன்ற மாறுபாடுகளைக் கண்டறிய, மரபணுக்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லாரன்ஸ் யங் விடுத்த எச்சரிக்கையில், இந்த புதிய வகை வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து பரவுவதால், பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இது இருக்கிறது என்றார். மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கக்கூடிய, வளர்ந்து வரும் இதுபோன்ற மாறுபாடுகளைக் கண்டறிய, மரபணுக்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

பழங்களின் தோல் கூட வேஸ்ட் ஆகாது.. தண்ணீரை சுத்தம் செய்ய புதிய வழி - சிங்கப்பூர் விஞ்ஞானியின் அடுத்த சாதனை!

click me!