கருக்கலைப்பை அரசியலமைப்பு உரிமையாக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாக பதிவு செய்த முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
நேற்று பிரான்ஸ் நாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டம் வெர்சாய்ஸ் அரண்மனையில் உள்ள நேற்று சிறப்பு அறையில் கூடியது. அப்போது இந்த மசோதாவுக்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் அல்லது 512 உறுப்பினர்களின் ஆதரவு இதற்கு தேவையானதாக இருந்தது. இந்த சூழலில் 780 உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரான்ஸில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களுக்கு பாரம்பரிய முறைப்படி சீலிங் செரிமனி விழா நடத்தப்படும். அந்த வகையில் இந்த கருக்கலைப்பு மசோதாவுக்கு வரும் வெள்ளிக்கிழமை மகளிர் தினத்தன்று சீலிங் செரிமனி விழா நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் இம்மேனுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மத்திய பாரிஸில் கூடியிருந்த கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் இந்த சட்டத்தை உற்சாகமாக வரவேற்றனர். நாடாளுமன்றத்தின் வாக்களிப்பின் முடிவு மாபெரும் திரையில் அறிவிக்கப்பட்டபோது "MyBodyMyChoice" என்ற செய்தியைக் காட்டியதும் அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த வாக்கெடுப்புக்கு. முன்னதாக பேசிய பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் "நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறோம்: உங்கள் உடல் உங்களுக்கு சொந்தமானது, உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது," என்று கூறினார்.
1975 முதல் பிரான்சில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமானதாக இருந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் பல நாடுகளை விட பிரான்சில் கருக்கலைப்பு உரிமைகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, சுமார் 80 சதவீத பிரெஞ்சு மக்கள் கருக்கலைப்பு சட்டபூர்வமானது என்ற முடிவை ஆதரிக்கின்றனர் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். நாட்டில் கருக்கலைப்பு உரிமைக்கு பெரும் ஆதரவு இருப்பதால், அரசியல் புள்ளிகளைப் பெற மக்ரோன் இதைப் பயன்படுத்துகிறார் என்று தீவிர வலதுசாரித் தலைவர் மரைன் லு பென் கூறினார். வாக்கெடுப்புக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் லு பென் பேசிய போது "அரசியலமைப்புச் சட்டத்தில் அதைச் சேர்ப்பதற்கு நாங்கள் வாக்களிப்போம், ஏனெனில் அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று வெர்சாய்ஸ்கூறினார், அதே நேரத்தில் அதை ஒரு வரலாற்று நடவடிக்கை என்று அழைப்பது மிகைப்படுத்தலாகும்,” என்று தெரிவித்தார்.