டென்னிஸ் அரங்கில் மாடல் அழகியுடன் உல்லாசம்... டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RM  |  First Published Sep 18, 2020, 5:12 PM IST

டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். டிரம்ப் பலமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாகவும் தேர்தல் சமயத்தில் அதை வெளியிடாமல் இருக்க, அவரது வக்கீல் தனக்கு ₹92 லட்சம் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினார்


அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.

ஏற்கனவே டிரம்ப், மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது சந்தேகம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென மாடல் அழகி ஒருவர் அமெரிக்க அதிபர் மீது பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். முன்னாள் மாடல் அழகியான ஏமி டோரீஸ் என்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடந்த 1997ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரங்கில் இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ஆனால் அதிபர் டிரம்பின் வழக்கறிஞர்கள் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2016 அதிபர் தேர்தலின் போது டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். டிரம்ப் பலமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாகவும் தேர்தல் சமயத்தில் அதை வெளியிடாமல் இருக்க, அவரது வக்கீல் தனக்கு ₹92 லட்சம் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினார். இதை டிரம்ப் மறுத்தார். இதுதொடர்பான வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, தனக்கு வக்கீல் செலவு நிதி கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் டேனியல் மனு செய்தார். இந்த வழக்கில் ஒரு வாரத்தில் டிரம்ப் ₹33 லட்சத்தை டேனியலுக்கு தர உத்தரவிடப்பட்டுள்ளது

click me!