கொரோனா மருந்துக்காக அடித்துக்கொள்ளும் அமெரிக்கா , ஜெர்மனி..!! மருந்தை விட்டுகொடுக்க முடியாது என பிடிவாதம்..!

By Ezhilarasan Babu  |  First Published Mar 17, 2020, 1:17 PM IST

உலக நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு  எதிரான மருந்தை கொள்முதல் செய்வதில்  ஜெர்மனி அமெரிக்கா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது .


உலக நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு  எதிரான மருந்தை கொள்முதல் செய்வதில்  ஜெர்மனி அமெரிக்கா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது . இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டி  சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது , கொரோனா  வைரசுக்கு  ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் தடுப்பு மருந்து கண்டு பிடித்துள்ள நிலையில் ,  இரு நாடுகளுக்கும் இடையே இந்த போட்டி ஏற்பட்டுள்ளது .   சீனாவில் தோன்றிய  கரோனா வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அந்நாடுகளை அச்சுறுத்தி வருகிறது .  இதுவரையில் சீனாவில் மட்டும்  3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Latest Videos

இந்நிலையில்  இந்த வைரசுக்கு உலக அளவில் 7,200 பேர் உயிரிழந்துள்ளனர் . 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .   இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து இல்லாததால்  உயிரிழப்புகள் தொடர்கதையாகி உள்ளன.  இந்நிலையில்  ஜெர்மனியைச் சேர்ந்த  க்யூர்வேக் நிறுவனம்  கொரோனாவுக்கு  எதிராக முதல் மருந்தை உருவாக்கியுள்ளது . இந்நிலையில்  ஜூலை முதல் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . ஜெர்மனியின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான  க்யூர்வேக் எனும் நிறுவனம் தற்போது மருந்தை சோதனை செய்து வருவதுடன் ஜூலை முதல் மருந்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது .  இந்நிலையில் இந்த மருந்து நிறுவனத்தை கையகப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  முயற்சித்து வருகிறார்.   

ஜெர்மனி நிறுவனத்திடமிருந்து மருந்தைக் கொள்முதல் செய்வதற்கும் அதேநேரத்தில்  மருந்து கம்பெனியை மொத்தமாக விலைக்கு வாங்கவும் அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டு வருகிறார் என ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது .இந்த மருந்து கம்பெனியை அமெரிக்க வாங்கும் பட்சத்தில் மருந்து முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் , அதேநேரத்தில் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தர மறுப்பதுடன்,  அமெரிக்கர்களுக்கு மட்டுமே மருந்து பயன்படுத்தப்படும் எனவும் ஜெர்மனி கூறியுள்ளது . எனவே ஜெர்மனி நாட்டு மருந்து கம்பெனியை அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுக்க தாங்கள் தயாரக இல்லை என ஜெர்மனி கூறியுள்ளது.  அத்துடன் மருந்து அனைவருக்கும் பயன்படக் கூடியதாக இருக்கும் வேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது. மருந்து கம்பெனியை யார் கொள்முதல் செய்வது என்ற மோதல் அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே ஏற்பட்டுள்ள நிலையில் இது உலகில் அளவில் மிகப்பெரிய கார்ப்பரேட் சண்டையாக மாறியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.  

click me!