15 வயது சிறுமியிடம் ஃபேஸ் புக் மூலம் பழகி சிலுமிஷம்! தொழிலதிபர் கைது!

By manimegalai a  |  First Published May 20, 2019, 5:00 PM IST

உலகம் முழுவதிலும், நாளுக்கு நாள் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது, என்பதை உறுதி படுத்தும் வகையில் செய்திகள் வெளியாகி வருகிறது.
 


உலகம் முழுவதிலும், நாளுக்கு நாள் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது, என்பதை உறுதி படுத்தும் வகையில் செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த,  கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் பேஸ்புக் மூலம் 15 வயது சிறுமியை மயக்கி சில்மிஷம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Videos

அமெரிக்கா நியூ ஜெர்சியை சேர்ந்த ஸ்டீபன் பிராட்லி,  ஃபேஸ் புக் மூலம், 15 வயதே ஆகும் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அவருடைய மனதில் இடம்பிடிக்க பல்வேறு பரிசு பொருட்கள், உடை, ஆபரணம் ஆகியவற்றை கொடுத்து காதலிக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார். 

இந்நிலையில் தனி விமானம் ஒன்றில்,  15 வயது சிறுமியுடன் பாலியல் சிலுமிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.  இது குறித்து சிறுமி வெளியுலகிற்கு கொண்டுவர, தற்போது இவர்  மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  மேலும் இவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

click me!