பொது மக்கள் அனைவருக்கும் போனஸ்!  அசத்திய சிங்கப்பூர் அரசு !!

First Published Feb 20, 2018, 11:38 AM IST
Highlights
Bonus for singapore people. govt declared


சிங்கப்பூரில் செலவுகளைக்காட்டிலும் அதிக வருவாய் உள்ள பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உபரி வருவாய் அனைத்தும் பொதுமக்களுக்கு போனஸாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர்  ஹெங் ஸ்வீ கீட் அண்மையில்  நிதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு சுமார் 7.6 அமெரிக்க டாலர் ரூபாய் வருவாய் உபரியாக உள்ளதாக தெரிவித்தார். அதாவது  செலவுகளை விட வருவாய் அதிகம் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த உபரி தொகை முழுவதும்,  சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 வயது நிரம்பிய குடிமகன் இந்த போனஸை பெற தகுதியானவர் என்றும், குடிமக்களின் வருவாய்க்கு ஏற்ப இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை போனசாக வழங்கப்படவுள்ளது.. இதற்காக, 533 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள 27 லட்சம் குடிமக்கள் இதனால் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கமாகும். ஆனால் மிகச் சிறிய நாடான சிங்கப்பூர் எப்போதுமே உபரி பட்ஜெட் தாக்கல் செய்யும் நாடாகவே விளங்குகிறது.

சிங்கப்பூர் மக்கள் கடினமான உழைப்பைத் தருபவர்கள். அதே நேரத்தில் தங்களது வருவாய்க்குரிய வரியை தவறாமலும், ஏமாற்றாமலும் கட்டிவருகின்றனர். குறிப்பாக அங்கு சிறந்த அரசியல்வாதிகளும் உள்ளதால் உபரி பட்ஜெட், உபரி தொகை போனஸாக வழங்கப்படுவது என்பது சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

click me!