திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.
Image credits: our own
சொர்க்கவாசல் திறப்பு
அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 10ம் தேதி நடைபெறுகிறது.
Image credits: our own
உள்ளூர் விடுமுறை
இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
Image credits: our own
பள்ளிகளுக்கு விடுமுறை
அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.
Image credits: our own
அரசு அலுவலகங்கள்
அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு வழக்கம்போல இயங்கும்.
Image credits: our own
பள்ளி வேலை நாள்
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.