tamilnadu

புதுவகையான பட்டாசுகள்

Image credits: our own

பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகையென்றாலே பட்டாசு தான். கடந்த ஆண்டு மட்டும் 5ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டது
 

Image credits: Getty

பட்டாசின் வகைகள்

இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் புதிய தொழில் நுட்பத்தில் 400 வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
 

Image credits: our own

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் உள்ளூரில் மட்டுமல்லாமல், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
 

Image credits: Getty

சிறுவர்களை கவரும் பட்டாசு

ஆண்டுதோறும் புதிய யுக்திகளை கையாண்டு சிறுவர், சிறுமியர், இளைஞர்களை கவரும் வண்ணம் வித்தியாசமான பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர்
 

Image credits: our own

வானில் வர்ணஜாலம்

வானில் வர்ணஜாலங்கள் நிகழ்த்தும் வகையில், 15 ஷாட் முதல் 240 ஷாட் வரை வெடிக்கும் பட்டாசுகள் 400 முதல் 4500 ரூபாய் வரை விற்பனையாகின்றன.

Image credits: our own

மயில் தோகை பட்டாசு

மயில் தோகை போல விரிந்து வெடிக்கும் புதிய வானவெடியில் 30 முறை வானில் மயில் தோகை போல விரிந்து வெடிக்கும்.
 

Image credits: our own

கிரிக்கெட் பட்டாசு

சுழலும் கம்பி மத்தாப்புகள், சக்கரம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில், இந்த ஆண்டு கிரிக்கெட் மட்டை மற்றும் பந்து வெடி சந்தைக்கு வந்துள்ளது.

Image credits: our own

பட்டாசு விலை

இரவு மற்றும் பகல் நேர பட்டாசு விலையானது இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 100 ரூபாய்க்கு வாங்கிய பட்டாசு தற்போது 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

Image credits: Getty
Find Next One