sports

ஸ்மிருதி மந்தனா vs விராட் கோலி

கோலியை மிஞ்சிய சதம்

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 70 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் அவர் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.

இருவரின் ஓடிஐ சாதனைகள் எப்படி?

97 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு, ஸ்மிருதி மந்தனா விராட் கோலியை மிஞ்சினார். கோலி இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருவரின் புள்ளி விவரங்களையும் பார்க்கலாம்.

கோலியின் சாதனை

விராட் கோலி 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிறகு 4,107 ரன்கள் எடுத்தார். அப்போது அவர் 13 சதங்களையும் அடித்திருந்தார். 34 அரைசதங்களையும் அடித்திருந்தார். 

ஸ்மிருதி மந்தனாவின் சாதனை

97 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடிய பிறகு, ஸ்மிருதி மந்தனா 4,209 ரன்கள் எடுத்தார். அவர் இதுவரை மொத்தம் 10 சதங்களை அடித்துள்ளார். மேலும், 39 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

விராட் கோலியின் ஓடிஐ

விராட் கோலி 297 ஒருநாள் போட்டிகளில் 13.906 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 94 ரன்கள் எடுத்தால் இந்தியாவுக்காக 14,000 ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற பெருமையை பெருவார்.

ஸ்மிருதி மந்தனாவின் ஓடிஐ

ஸ்மிருதி மந்தனா தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 4,209 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது 11வது இடத்தில் உள்ளார். மிதாலி ராஜ் 7,805 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 

சதங்களின் நாயகி

ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களுடன் மந்தனா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மெக் லானிங் (ஆஸ்திரேலியா) 15 சதங்களும் சூசி பேட்ஸ் (நியூசிலாந்து) 13 சதங்களும் அடித்துள்ளனர்.

திரையில் ஜொலித்த கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்?

எல்லா ஏரியாலயும் நாங்க கிங்: சினிமாவில் ஜொலித்த கிரிக்கெட் வீரர்கள்

பும்ரா vs அக்ரம்: ஒருநாள் போட்டிகளில் யார் 'கிங்'?

மகா ராணியாக வாழும் ஸ்மிருதி மந்தனா: இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?