life-style
நீங்கள் தூங்கும் நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தை ஒரே மாதிரியாக மாதிரியாக பின்பற்றுங்கள். இதனால் சரியான தூக்கத்தின் சுழற்சி பராமரிக்கப்படும், தூக்கத்தின் தரமும் மேம்படும்.
நல்ல தூக்கம் கிடைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தூக்கமின்மையின் அறிகுறிகளை குறைக்கும்.
தூக்கத்தின் தரம் மேம்பட தூங்குவதற்கு ஏற்ற சூழலை உங்கள் அறையில் தயார் செய்யுங்கள். அதாவது சரியான படுக்கை தலையணை போன்றவையாகும். இது நல்ல தூக்கத்திற்கு உதவும்.
நீங்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன் உங்களது மனம் அமைதியாக இருந்தால் நல்ல தூக்க வரும். இதற்கு சுவாச பயிற்சி, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றை செய்யலாம்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் டிவி, மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதிலிருந்து வரும் ஒளிக்கதிர் தூக்கத்தை சீர்குலைக்கும்.
தூங்கு செல்வதற்கு முன்பாக காஃபின் குடித்தால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும். எனவே முடிந்த வரை காஃபின் குடிப்பதை தவிர்க்கவும்.
இரவு அதிகமாக சாப்பிட்டால் உங்களது தூக்கம் கெடலாம். இதுபோல புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.