வாஷிங்டனில் நடைபெற்ற டிரம்பின் பதவியேற்புக்கு முந்தைய விழாவில் நீதா அம்பானி கம்பீரமான காஞ்சிபுரம் சேலையில் கலந்து கொண்டார்.
காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் 100 மோட்டிஃப்கள்
இந்திய பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டுச் சேலையை நீதா அம்பானி தேர்ந்தெடுத்தார். இந்த சேலையில் காஞ்சிபுரத்தின் கோயில்களின் வடிவமைப்பில் 100 மோட்டிஃப்கள் உள்ளன.
18 ஆம் நூற்றாண்டின் இந்திய நகைகள்
இந்த சேலைக்கு ஏற்றவாறு 18 ஆம் நூற்றாண்டின் இந்திய பாரம்பரிய நகைகளை நீதா அணிந்திருந்தார். இதன் மூலம் இந்திய கலாச்சாரத்தை உலக அரங்கில் வெளிப்படுத்தினார்.
சேலையை வடிவமைத்தவர்
தேசிய விருது பெற்ற கைவினைஞர் பி. கிருஷ்ணமூர்த்தி இந்த சேலையை வடிவமைத்தார். இதில் இருதலைப்பட்சி, மயில் போன்ற வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன.
200 ஆண்டு பழமையான பதக்கம்
நீதா அணிந்திருந்த 200 ஆண்டு பழமையான நெக்லஸ் மரகதம், மாணிக்கம், வைரம், முத்துக்களால் ஆனது. இதன் டாலர் கிளி வடிவத்தில் உள்ளது.
முழுக்கை வெல்வெட் ரவிக்கை
இந்த சேலையுடன் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த முழுக்கை வெல்வெட் ரவிக்கையை நீதா அணிந்திருந்தார்.