உலகில் அனைவரும் மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். இரவில் உறங்கச் செல்வதற்கு முன் சில செயல்களைச் செய்தால், அந்த விருப்பம் நிறைவேறும்.
கற்பூரம் ஏற்றுங்கள்
இரவில் உறங்கச் செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன் உங்கள் அறையில் கற்பூரம் ஏற்றுங்கள். இதனால் அறையில் நேர்மறை ஆற்றல் நிறைந்து மகிழ்ச்சியைத் தரும்.
இறைவனைத் தியானியுங்கள்
உறங்கச் செல்வதற்கு முன் இறைவனைத் தியானம் செய்யவும். அன்றைய தினம் செய்த நல்ல செயல்களுக்கு நன்றி செலுத்துங்கள். இதனால் நன்றாகத் தூங்க முடியும்.
சுலோகங்களைப் படியுங்கள்
தூங்குவதற்கு முன் கீதையின் ஏதேனும் ஒரு சுலோகத்தைப் படிக்கலாம். இதன் மூலமும் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கும்.
தானம் செய்யுங்கள்
தூக்குவதற்கு முன் யாருக்காவது ஒரு பொருளை தானம் செய்யுங்கள். இதனால் உங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும். மன அழுத்தமின்றி நிம்மதியாக உணர்வீர்கள்.
உறங்கச் செல்வதற்கு முன் இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்
இரவில் உறங்கச் செல்வதற்கு முன் இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள். இதனால் நல்ல தூக்கம் வரும். "நித்ராம் பகவதிம் விஷ்ணோ, அதுல தேஜஸ் பிரபோ நமாம்."