life-style
ஆரோக்கியமான உணவு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
சில உணவுகளை சாப்பிட்டால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பு குறையும். இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதற்கு என்ன சாப்பிட வேண்டும்?
கீரை வகைகள் நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. பல்வேறு கீரைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, ஃபோலேட், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இதயத்தை பாதுகாக்கிறது.
ஆரஞ்சு பழங்களும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
நட்ஸ் வகைகள் இதயத்தை மட்டுமல்ல உடல் முழுவதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். நட்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பூண்டும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதை தவறாமல் சாப்பிட்டால் கொழுப்பு, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதனால் உங்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
கேரட்டும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், பொட்டாசியம் அதிகமாக உள்ளன. இது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.