ஆரஞ்சு தோலை வெள்ளை வினிகரில் சில நாட்கள் ஊற வைக்கவும். பின்னர் தோலை வடிகட்டி, இந்தக் கலவையை சமையலறை கவுண்டர் மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தவும்.
மெழுகுவர்த்தி தயாரிப்பு
ஆரஞ்சு தோலை உருகிய மெழுகுவர்த்தி, திரி, 2-5 கிராம்பு மற்றும் பொடி செய்த கற்பூரம் சேர்த்து உலர வைக்கவும். உலர்ந்த பின்னர் ஏற்றி வைக்கவும்.
முக அழகுக்கான பேஸ் பேக்
ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை சருமத்தை பொலிவாக்குகின்றன. தோலை உலர்த்தி பொடியாக்கவும். இதை தயிர் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தடவவும்.
கேண்டி தயாரிப்பு
ஆரஞ்சு தோலை நீளமாகவும் சிறியதாகவும் வெட்டி, சர்க்கரை சேர்த்து சுவையான கேண்டி தயாரிக்கலாம். இது சுவையாகவும், எளிதாகவும், குறைந்த செலவில் தயாரிக்கவும் முடியும்.
இயற்கை ஹேர் கண்டிஷனர்
இது கூந்தலை பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்ற உதவுகிறது. ஆரஞ்சு தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர வைக்கவும். இந்த நீரில் கூந்தலை அலசவும்.
உரம் தயாரிப்பு
ஆரஞ்சு தோல் உரம் தயாரிக்க பயனுள்ளதாக இருக்கும். தோலை சிறிய துண்டுகளாக வெட்டி தோட்டத்தில் போடவும். இது செடிகளுக்கு இயற்கை உரமாக செயல்படும்.