Food
பரோட்டாவில் கார்போஹைட்ரேட் அதிகம். செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். வயிறு உப்புசம், அசிடிட்டி, வயிற்று வலி ஏற்படலாம்.
பரோட்டா சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு காரணமாகத் தூக்கம் கெடலாம். அதிக கொழுப்பு, இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து தூக்கத்தைப் பாதிக்கும்.
இரவில் பரோட்டா சாப்பிட்டால் வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், அசிடிட்டி, மலச்சிக்கல் ஏற்படலாம்.
அதிக கலோரி உள்ள பரோட்டாவை இரவில் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும்.
பரோட்டா சாப்பிட்டால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
இரவில் உடல் உழைப்பு அதிகம் இருக்காது. எனவே பரோட்டா சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.
எப்போதாவது பரோட்டா சாப்பிட நீங்கள் ஆசைப்பட்டால், மைதாவில் செய்யும் பரோட்டாவை தவிர்த்து கோதுமை மாவு பரோட்டா சாப்பிடுவது சிறந்தது.