cinema
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமாரின் மகள் என்கிற அடையாளத்துடன் அறிமுகமானவர் தான் வரலட்சுமி சரத்குமார்.
போடா போடி திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும், பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' இவருக்கு திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
முன்னணி நடிகை என்கிற இடத்தை தவற விட்டாலும் வெயிட்டான குணசித்ர வேடங்களில் கலக்க துவங்கினார்.
அறிமுகமாகும் போது கொழுக்கு.. மொழுக்கு அழகியாக இருந்தாலும் பின்னர் மளமளவென எடையை குறைத்தார்.
குறிப்பாக திருமணத்திற்கு பின்னர், அழகு மெருகேறி காணப்படும் வரலட்சுமி சரத்குமார் வெயிட் லாஸ் பற்றிய சில டிப்ஸுகளை கூறியுள்ளார்.
அதாவது உடல் எடையை குறைக்க 4 விஷயங்களை மட்டும் தான் ஃபாலோ செய்தாராம். வேர்வை கொட்டும் படி High Intensity Workout செய்வாராம்.
தனக்கான வேலைகளை தானே செய்து கொள்வதும் சிறந்த உடல் பயிற்சி என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
தினசரி உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது, ஒரு ஆக்டிவான வாழ்க்கை முறை அவசியம் என்பதையும் வரலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
தியானம் மற்றும் யோகாசனமும் உடல் நலன் மற்றும் மன நலனை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் .
இதோடு காய்கள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளும், வெயிட் மேனேஜ்மென்டுக்கு உதவும் என வரு தன்னுடைய கருத்தை பகிர்துகொடனுள்ளார்.