cinema
ஊட்டியை சேர்ந்த, நடிகை வாணி போஜன் ஒரு விமான பணிப்பெண்ணாக தன்னுடைய கேரியரை துவங்கிவர்.
பார்த்ததுமே வசீகரிக்கும் இவரின் அழகு, விளம்பர படங்களில் மாடலாக நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.
கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்து கொண்ட வாணிக்கு சில சீரியல் ஆப்பர்களும் கதவை தட்ட துவங்கின.
அந்தவகையில் இவர் நடித்த, தெய்வ திருமகள் சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் லட்சுமி என்கிற தொடரில் நடித்தார்.
சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே சில திரைப்படங்களில் இவர் நடித்த நிலையில், அந்த படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
பின்னர் அசோக் செல்வன் - ரித்திகா சிங் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுள்' திரைப்படம் வாணிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
ஒருபக்கம் திரைப்படம், இன்னொரு பக்கம் வெப் சீரிஸ் என படு பிசியாக நடித்து வருகிறார் வாணி.
தான் நடிக்கும் படங்களுக்கு 50 லட்சம் வரை சம்பளமாக இவர் பெறுவதாக கூறப்படுகிறது.
விதவிதமான போட்டோஸ் ஷூட் நடத்தி வரும் வாணி போஜன் தற்போது சோகமான முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
உலகளவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 பான் இந்தியா மூவீஸ்
புகைப்பழக்கம் - மதுவை நிறுத்தியது எப்படி? விஷால் கூறிய ஆச்சர்ய தகவல்!
ஷங்கர் முதல் ராம்சரண் வரை; கேம் சேஞ்சர் பட பிரபலங்களின் சம்பள விவரம்
50 வயதுக்கு மேல் அப்பாவான 7 பிரபலங்கள்!