cinema
கவிஞர் வாலி பொதுவாக பாடல்கள் எழுதும் போது குடுக்க மாட்டார் என்றாலும், ஒருமுறை சூழ்நிலை காரணமாக குடி போதையில் எழுதியுள்ளார்.
80 வயதிலும் துள்ளலான வரிகள் நிரம்பி வழியும் பாடல்களை வாரி இறைத்தவர் வாலி. சுமார் 15,000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல், விஜய் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.
இவர் சினிமாவில் பாடல் எழுதிய ஆரம்ப காலகட்டத்தில், மிகப்பெரிய ஆளுமையாக இருந்த ஏ.வி.எம் நிறுவனத்தில் மட்டும் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
ஆனால் வாலிக்கு ஏவிஎம் நிறுவனத்தில் பாடல் எழுத வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு.
ஒரு முறை எதேர்சையாக வாலி, தெய்வத்தாய் படத்திற்கு எழுதிய பாடல்களை கேட்டு வியந்து போன மெய்யப்ப செட்டியார் வாலியை தன்னுடைய படங்களில் பாடல் எழுத வைக்க விரும்பினார்.
விஸ்வநாதன் ஸ்டுடியோவில் பாடல் எழுத வந்த வாலி, ஏவிஎம் தயாரிப்பில் நமக்கு பாடல் எழுத வாய்ப்பில்லை என நினைத்து எம்எஸ்வி-யிடம் சொல்லாமலே வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
வீட்டில் சாவகாசமாக அமர்ந்து, சரக்கடித்துக்கொண்டிருந்த வாலிக்கு, மெய்யப்ப செட்டியார் உடனே பாடல் எழுத சொன்னது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
செய்வதறியாது உடனே குளித்து விட்டு ஸ்டுடியோவுக்கு விரைந்தார். 'சர்வர் சுந்தரம்' படத்தின் சுச்சுவேஷன் சொல்ல சொல்ல அவர் எழுதிய பாடல் தான் 'அவளுக்கென்ன அழகிய முகம் பாடல்'
வாலி இந்த பாடலை போதையில் எழுதி இருந்தாலும், இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.