cinema
உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இன்று தன்னுடைய 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் .
சரிகா - கமல் ஹாசன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ஸ்ருதி ஹாசன் 1986 இல் சென்னையில் பிறந்தார். என்பது உங்களுக்குத் தெரியுமா?
கமல் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட பின்னர், சரிகாவுடன் லிவிங் ரிலேஷன்-ஷிப்பில் ஒன்றாக வாழ்ந்தபோது சரிகா கர்ப்பமானார்.
ஸ்ருதி ஹாசனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சரிகா மற்றொரு மகள் அக்ஷராவைப் பெற்றெடுத்தார்.
இதை தொடர்ந்து, நடிகை கௌதமி மீது கமல்ஹாசன் இன்ட்ரெஸ்ட் காட்டியது சரிகா - கமல் விவாகரத்து பெற காரணமாக அமைந்தது. அதன்படி 2004 இல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
ஸ்ருதி ஹாசன் தனது நிஜ பெயரை மறைத்து பள்ளியில் படித்ததாக கூறப்படுகிறது. நடிகரின் மகள் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் பூஜா ராமச்சந்திரன் என்ற பெயரைப் பயன்படுத்தினார்.
ஸ்ருதி ஹாசன் 1999 இல் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர்.
தென்னிந்திய படங்களுடன், ஸ்ருதி ஹாசன் பாலிவுட்டிலும் நடித்தார், ஆனால் அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
லக், டி-டே, ராமையா வஸ்தாவையா, கப்பர் இஸ் பேக், வெல்கம் பேக், ராக்கி ஹேண்ட்ஸம் போன்ற படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்தார்.
தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி மற்றும் சலார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பை விட பாடலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.