cinema
திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மாளவிகா மோகனன்.
இவர் வெளியிடும், அழகிய புகைப்படங்களை ரசிப்பதற்காகவும் சமூக வளைத்ததில் இவரை சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
பல சமயங்களில் மாடர்ன் மங்கையாக தோன்றினாலும் சில நேரங்களில் சேலையில் வசீகரிக்கிறார்.
இவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு நாள் இந்த அழகை எங்கு புதைத்து வைத்திருந்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதே போல் தன்னுடைய சேலைக்கு பொருத்தும் விதமாக கழுத்தை ஒட்டி இருக்கும் சோக்கர் நெக்லஸ் மற்றும் கம்மல் அணிந்துள்ளார்.
குறிப்பாக நெற்றியில் வைத்துள்ள சிவப்பு நிற பொட்டு , மாளவிகாவை தனித்துவமாக காட்டுகிறது.
கை நிறைய வளையல், விரல்களை அழகாகும் பெரிய மோதிரம் என பேரழகியாக ஜொலிக்கிறார்.
அதே போல் தன்னுடைய இடையழகை எடுத்து காட்டும் விதமாக ஹிப் செயின் ஒன்றையும் அணிந்துள்ளார்.
தாமரை குளத்தின் பக்கத்தில், தங்க தாரகை போல் அமர்ந்து இவர் கொடுத்துள்ள போஸ் வேற லெவலில் உள்ளது.
மாளவிகா மோகனனின் புதிய புகைப்படங்களை கண் கொட்டாமல் ரசித்து வரும் ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.