cinema

2025-ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள்!

Image credits: our own

விடாமுயற்சி

அஜித் நடித்த விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான புதுப்படங்கள் களமிறங்கி உள்ளன.

Image credits: Google

நேசிப்பாயா

விஷ்ணு வர்தன் இயக்கி உள்ள நேசிப்பாயா படம் ஜனவரி 14ந் தேதி திரைக்கு வருகிறது. இதில் முரளி மகன் ஆகாஷ் நாயகனாகவும், ஷங்கர் மகள் அதிதி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

Image credits: our own

மெட்ராஸ்காரன்

மலையாள நடிகர் ஷான் நிகம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் மெட்ராஸ்காரன். இப்படம் ஜனவரி 10ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

Image credits: our own

காதலிக்க நேரமில்லை

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காதலிக்க நேரமில்லை. ஜெயம் ரவி, நித்யாமேனன் நடித்துள்ள இப்படம் ஜனவரி 14ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

Image credits: our own

வணங்கான்

பாலா இயக்கியுள்ள வணங்கான் படமும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார்.

Image credits: our own

கேம் சேஞ்சர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படமும் ஜனவரி 10ந் தேதி திரைக்கு வருகிறது.

Image credits: Social Media

மத கஜ ராஜா

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படம் ஜனவரி 12ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Image credits: our own

தீபிகா படுகோன் வைத்திருக்கும் 6 விலைமதிப்புள்ள பொருட்கள்!

நடிகர் சிம்பு நடித்து டிராப் ஆன படங்கள் ஒரு பார்வை

டிக்கெட் டூ பினாலே ஜெயித்த பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்

TRP-ல் கெத்து காட்டிய எதிர்நீச்சல் 2; இந்த வார டாப் 10 சீரியல் இதோ