cinema
97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
இந்திரா இயக்கியுள்ள புடுல் என்கிற பெங்காலி திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் என்கிற இந்திப் படமும் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தை ஷுச்சி தலாட்டி இயக்கி உள்ளார்.
பாயல் கபாடிய இயக்கிய மலையாள படமான ஆல் வி இமாஜின் அஸ் லைட் திரைப்படமும் ஆஸ்கர் ரேஸில் உள்ளது.
ரன்தீப் ஹூடா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இந்திப் படமான சாவர்கார் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
சந்தியா சூரி இயக்கத்தில் சஹானா கோஸ்வாமி நடித்துள்ள இந்திப் படமான சந்தோஷ் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
பிளெஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் ஆஸ்கருக்கு சென்றுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த வரலாற்று கதையம்சம் கொண்ட தமிழ் படமான கங்குவா ஆஸ்கர் ரேஸில் களமிறங்கி உள்ளது.
நாமினேஷனில் உள்ள 323 படங்களுக்கான வாக்கெடுப்பு ஜனவரி 8 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும். இதில் அடுத்தகட்டத்துக்கு செல்லும் படங்களின் பட்டியல் ஜனவரி 17ந் தேதி வெளியாகும்.