cinema
கார்த்திக் நரேன் இயக்கத்தில், நவம்பர் 22 வெளியான 'நிறங்கள் மூன்று' திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது. அதர்வா நடித்த இப்படம் ஹைபர் திரில்லர் பண்ணியில் எடுக்கப்பட்டது.
சத்ய தேவ் - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் தெலுங்கில் நவம்பர் மாதம் இந்த படம் வெளியானது. ஈஸ்வர் கார்த்திக் இயக்கி உள்ள இந்த படம் ஆஹா ஓடிடியில் வெளியானது.
இயக்குனர் முகமது முஸ்தப்பா இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் 'முரா'. சுராஜ் வெஞ்சரமுடி நடித்த இந்த படம் நவம்பர் 8-ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில், பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.
ராமராஜன் ஹீரோவாக நடித்து மே மாதம் திரைக்கு வந்த சாமானியன் திரைப்படம், டிசம்பர் 20- டென்ட்கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
லீ ஐசக் சங் இயக்கத்தில், ஜூலை மாதம் வெளியான ஆங்கில திரைப்படமான ட்விஸ்ட்டர்ஸ், டிசம்பர் 20 ஜியோ சினிமாஸில் வெளியாகிறது.
இயக்குனர் சஜி மப்பாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான கடகன் திரைப்படம், டிசம்பர் 20 சன் நெஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Bobby Farrelly இயக்கத்தில், நவம்பர் மாதம் ஆங்கிலத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'டியர் சாண்டா' திரைபடம் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.
இயக்குனர் அலெக்ஸ் கென்ரிக் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான தி ஃபோர்ஜ், டிசம்பர் 20 நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இயக்குனர் Tyler Perry இயக்கத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி வெளியான இந்த படம், 15 நாட்களுக்குள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.