நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் கடந்த டிசம்பர் 12-ந் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அவர் தன் நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார்.
Image credits: Instagram
2 முறை திருமணம்
காலையில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ், மாலையில் கிறிஸ்தவ முறைப்படி ஆண்டனியை கரம்பிடித்தார்.
Image credits: Instagram
பிரபலங்கள் பங்கேற்பு
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் அட்லீ, சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, டிடி, தளபதி விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது.
Image credits: Instagram
நோ ஹனிமூன்
திருமணம் முடிந்ததும் ஹனிமூன் செல்லாமல் நேராக பட புரமோஷனுக்கு சென்றுவிட்டார் கீர்த்தி. அவர் நடிக்கும் பேபி ஜான் படம் டிசம்பர் 25ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
Image credits: our own
கைவசம் உள்ள படங்கள்
பேபி ஜான் தவிர்த்து நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னிவெடி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. அதிலும் நடித்து முடித்துவிட்டார்.
Image credits: our own
படங்களுக்கு நோ
கைவசம் உள்ள படங்களை மட்டும் முடித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் மேற்கொண்டு வேறு எந்த படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை.
Image credits: Instagram
விலகுகிறாரா கீர்த்தி?
புதுப் படங்களில் கமிட் ஆகாததால் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு விலகப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Image credits: Instagram
அடுத்த பிளான்
திருமணம் ஆனதால் கணவருடன் நேரத்தை செலவழிக்க முடிவெடுத்துள்ளதால் தற்போதைக்கு கீர்த்தி எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்றும், சில மாதங்களுக்கு பின் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாம்.