இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இன்ஃபோசிஸ் ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் ஊதிய உயர்வு இல்லை
இன்ஃபோசிஸ் நிறுவனம் சமீபத்தில் ஊழியர்களின் சம்பள உயர்வு திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. நான்காம் காலாண்டில் இதுகுறித்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடைசி ஊதிய உயர்வு எப்போது?
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடைசியாக 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. பின்பு ஓரான்டுக்கும் மேலாக ஊதிய உயர்வு இல்லை.
என்ன காரணம்?
உலகளாவிய தேவை, நிச்சயமற்ற தன்மை மற்றும் ஐடி சேவைகளுக்கான செலவினங்களில் குறைவு காரணமாக இன்ஃபோசிஸ் சம்பள உயர்வை ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 மணி நேர வேலை
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், ஊதிய உயர்வு விஷயத்தில் அந்நிறுவனம் பின்வாங்கியுள்ளது.
கடின உழைப்பு அவசியம்
''கடின உழைப்பு இல்லாமல் இந்தியாவை முன்னேற்ற முடியாது இளைஞர்கள் அதிகமாக உழைக்க வேண்டும்'' என்று நாராயண மூர்த்தி கூறியிருந்தார்.
நாராயண மூர்த்தியின் கருத்துக்கு எதிர்ப்பு
நாராயண மூர்த்தியின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்தன. ஒரு சிலர் அவரது கருத்தை ஆதரித்தனர்.
ரூ.6,506 கோடி லாபம்
இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) இன்ஃபோசிஸின் நிகர லாபம் 2.2% உயர்ந்து ரூ.6506 கோடியாக இருந்தது. ஆனால், இது எதிர்பார்ப்பை விட குறைவு என கூறப்படுகிறது.