தங்கத்தின் மீதான ஆர்வம் காரணமாக மக்கள் நகைகளை வாங்கி வருகிறார்கள். நகை விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
Image credits: instagram
தங்கத்தை வாங்குவது ஏன்.?
தங்கத்தின் விலை வரும் நாட்களில் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளதால் தற்போதே வாங்கி வைக்க மக்கள் போட்டி போட்டு தங்கத்தை வாங்குகிறார்கள்
Image credits: insta-shyamsundarcojewellers
அவசர தேவைக்கு தங்கம்
மருத்துவ செலவு போன்ற அவசர காலங்களில் நகைகளை எளிதாக விற்கவோ, அடகு வைக்கவோ முடியும். இதனால் தங்கத்தை வாங்க மக்கள் விருப்பப்படுகிறார்கள்
Image credits: instagram
தங்கத்தின் விலை உயர்வு
தங்கத்தின் விலையானது ஆக்.31ஆம் தேதி உச்சத்தை தொட்டது. அடுத்த சில நாட்களில் சவரனுக்கு 4000 ரூபாய் வரை விலை குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Image credits: instagram
உயர தொடங்கிய தங்கம் விலை
கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்தது. நேற்று முன் தினம் கிராமுக்கு 10 ரூபாயும் சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்தது.
Image credits: pinterest
நேற்றும் உயர்ந்த தங்கம் விலை
நேற்று கிராமுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்தது. தங்கத்தின் விலை ஒரு சவரன் 57ஆயிரத்தை எட்டியது.
Image credits: instagram
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது இன்றும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து 7150 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 57,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது