Sep 23, 2019, 1:31 PM IST
அமெரிக்காவின் ஹாஸ்டன் கால்பந்து மைதானத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் சார்பில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அதில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இரு தலைவர்களின் பேச்சைக்கேட்க அரங்கத்தில் திரண்டிருந்தனர், முன்னதாக அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார், அப்போது அவர் இந்தியாவை வெகுவாக பாராட்டினார், அவரை தொடர்ந்து இந்திய பிரமர் மோடி உரையாற்றினார் அப்போது பேசிய அவர், உலக அரசியலை, நிர்ணயிக்கும், நபராக, டிரம்ப் விளங்குகிறார்.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளை மாளிகை உடனான இந்தியாவின் நட்புறவு மேலோங்கியுள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா தனி சிறப்பு மிக்க நாடு,பல நூறு ஆண்டுகளை கடந்து பல்வேறு மொழி, கலாசாரங்களுடன் வேற்றுமையில் ஒற்றுமை என்று தாரக மந்திரத்துடன் இந்தியா திகழ்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்கா இந்தியாவிற்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுத்திருக்கிறது. எப்படி இருக்கிறீர்கள்மோடி என்று கேட்கிறீர்கள், இந்தியர்கள் அனைவரும் நலம். எல்லாம் ”சௌக்கியம் “ என்று தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் அவர் உச்சரித்தார் அப்போது அரங்கமே அதிர்ந்தது, ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் சவால் அளித்த காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே சட்டம் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. என்று மோடி கூறியவுடன் ஒட்டுமொத்த இந்தியர்களும் எழுந்து நின்று மோடியின் பேச்சுக்கு ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பேசிய அவர். மக்களுக்கு பயன்படாத தேவையில்லாத ஒரு டசன் சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு மறுக்கப்பட்ட நீதி நாடாளுமன்றம் மூலம் கிடைத்துள்ளது. சிலநாடுகள் தீவிரவாதத்தை பாதுகாக்கின்றன. தீவிரவாததிற்கு ஆதரவான நாடுகளுக்கு எதிராக போராட வேண்டிய நேரம் இது. தங்கள் நாட்டை பற்றி கவலை படாதவர்கள் காஷ்மீர் குறித்து பேசுகிறார்கள் என்று மோடி கூற கூட்டம் ஆர்ப்பரித்தது. தீவிரவாததிற்கு எதிராக போராடும் டிரம்ப் பாராட்டுக்குறியவர்.
குறைவான பணவீக்கம்-வேகமான வளர்ச்சி என்ற இலக்கை எட்டியுள்ளோம். மக்களும், முதலீட்டாளர்களும் எளிதில் அணுகும் அரசாக நம் அரசு உள்ளது. கார்ப்பரேட் வரி குறைத்துள்ளதன் மூலம் அந்நிய முதலீடு இருமடங்கு அதிகரிக்கும். நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார் மோடி.