Aug 1, 2019, 3:44 PM IST
இங்கிலாந்தின் கிழக்கு எஸ்காட் பகுதியை சேர்ந்த 49 வயது எலிசபெத் ஹோட். இவர் ஒரு பிரபல மாடல். இவருக்கு முன்பிருந்தே ஆண்கள் மீது அதிக வெறுப்பு இருந்து வந்துள்ளது. இந்த வெறுப்பால் அவர் ஆண்களை அவர் நம்பாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு காரணம் அவர் இதற்கு முன் 220-க்கும் அதிகமான ஆண்களிடம் நெருக்கமாக பழகி இருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் 6 ஆண்களுடன் டேட்டிங் செய்துள்ளார். ஆனால், அவர்கள் யாரும் எலிசபெத்திற்கு உறுதுணையாக இருந்தது இல்லை எனக் கூறுகிறார். அடுத்து இரண்டு முறை திருமணம் நிச்சயம் வரை சென்றும் இரண்டு முறையும் தடைபட்டது.
இந்நிலையில், எலிசபெத் தான் வளர்த்து வரும் செல்லப்பிராணியான லோகன் என்ற நாயை திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். தான் வருத்தமாக இருக்கும்போது எல்லாம் தனக்கு லோகன் தான் ஆறுதலாக இருப்பதாகவும், அதனால் லோகனையே வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் எலிசபெத் திருமணம் செய்த பின் நாயுடன் ஹனிமூன் செல்ல ஃப்ரண்ட்லி ஹோட்டலில் அறையையும் புக் செய்து விட்டார்.
உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும், கேட்காத எலிசபெத், எந்த ஆண்களும் உறுதுணையாக இல்லாத தனக்கு, தான் வளர்க்கும் லோகன் என்கிற நாய்தான் உறுதுணையாக இருப்பதாகவும், அதனால் லோகனை மணம் முடிப்பதில், தான் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கென அந்த நாயின் முன்னங்கால்களில் பிரேஸ்லெட் மாட்டி நிச்சயதார்த்தம் செய்துகொண்டதோடு, நாயின் முன், ‘I Do’ என்று நாய் தனக்கு சம்மதம் சொல்வது போல் ஒரு போர்டு வைக்கப்பட்டது.