Sep 19, 2019, 4:15 PM IST
இந்தியா-அமெரிக்கா இடையே யுத்த அபியாஸ் என்ற பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்தாண்டுக்கான கூட்டுப் பயிறிச்சி அமெரிக்காவில் உள்ள லூயிஸ் மெக்கார்ட்டு பயிற்ச்சி மைதானத்தில் நடைபெற்றது. 15வது முறையாக நடக்கும் இந்த பயிற்ச்சிக்கு யுத் அப்யாஸ் 2009 என இந்தியா பெயர் சூட்டியுள்ளது.
சுமார் ஓருவார காலத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டுப்பயிற்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. அதன் இறுதி நிகழ்ச்சியில் அமெரிக்கா நாட்டு ராணுவ வீரர்கள் இந்திய நாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி நித்தம் அன்பை பரிமாறிக்கொண்டர். அப்போது இறுதியாக இந்திய தேசிய கீதத்தை முழுமையாக இசைத்து இந்திய இராணுவத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் மரியாதை செலுத்தினர்.
அதற்கான விடீயோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் மிடுக்காக ராணுவ உடையில் வரிசையில் நின்று நம் தேசிய கீதத்தை இசைக்கும் காட்சிகள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
பின்னர் இந்திய ராணுவ வீரர்கள் குறித்து தகவல்களை பகிருந்து கொண்ட அமெரிக்க இராணு வீரர்கள், இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை புகழ்ந்து பாராட்டியுள்னர். இந்திய ராணுவம் சர்வதேச அளவில் வலிமையான ராணுவம் என்பதில் சந்தேகமே இல்லை.
அவர்களின் இராணு யுக்திகள் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்திய ராணுவத்திடம் இருந்து நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொண்டோம் மீண்டும் இணைந்து பயிற்ச்சி மேற்கொள்ளவேண்டும் என்பதில் ஆவல் எழுந்துள்ளது என வியந்து பாராட்டியுள்ளனர்.