Feb 20, 2024, 6:04 PM IST
கடந்த 2018ம் ஆண்டு பிரபல நடிகர் உலக நாயகன் கமல் அவர்கள், தனது மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். இந்நிலையில் நாளை அக்கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் சாமானியனின் குரலாய் ஒலிக்க நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம் என்ற வாசகங்களுடன் ம.நீ.ம கட்சியினர் கோவை நகரில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்கவிழா நாளை பிப்ரவரி 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில் தமிழக மக்களின் அடிமட்ட சாமானியனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் ம.நீ.ம இடம் பெற்று, கமலஹாசன் கோவையில் போட்டியிடலாம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம் என்ற வாசகங்களுடன் கோவை நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.