நாளுக்கு நாள் ஆண்மை இல்லாதவங்க அதிகமாகிகிட்டே இருக்காங்க! அல்லு அர்ஜுன் வெளியிட்ட 'சாலா' பட ட்ரைலர்!

Aug 3, 2024, 8:02 PM IST

இயக்குனர் மணிபால் இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் 'சாலா'. இந்த காலத்திற்கு தேவையான ஒரு முக்கிய பிரச்னையை பேசியுள்ள இந்த படத்தில் தீரன் என்பவர் ஹீரோவாக நடிக்க, ரேஷ்மா வெங்கடேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஒரு பார்ரை கைப்பற்ற நினைக்கும் இரண்டு கும்பலுக்கு நடுவே நடக்கும் ரணகள போராட்டம் தான் இந்த படம். அடிதடி காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், குடியால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், எந்த அளவுக்கு குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் இயக்குனர் பேசியுள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைபெற்றுள்ளது .