"உங்கள் தோல்வியை நீங்களே ஒப்புக்கொண்டீர்கள்".. முதல்வரின் கேள்வி - ஆங்கிலத்திலேயே பதில் அளித்த அண்ணாமலை!

Mar 25, 2024, 5:24 PM IST

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக பாஜக சார்பாக கோவையில் திரு. அண்ணாமலை அவர்கள் போட்டியிடவிருக்கின்றார். இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பாஜக தொண்டர்கள் அதை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் நிச்சயம் அண்ணாமலை அவர்கள் வெற்றி பெறுவார் என்று பாஜக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், பிரதமர் மோடி குறித்த விமர்சனங்களை முன்வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார். அவர் பேசியது என்ன என்பது குறித்து பின்வருமாறு காணலாம்...

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது வணக்கங்கள். நீங்களும் உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உங்களது சமூக ஊடக கணக்குகளில் பதிவிடும் செய்திகளை குறித்து மக்கள் அனைவரும் அறிவார்கள். கடந்த சில நாட்களாகவே உங்கள் குரல்கள் மங்கி வருவதை என்னால் உணர முடிகிறது. 

மேலும் கடந்த சில நாட்களாக நீங்கள் ஏற்கனவே தோற்றுவிட்ட ஒரு தேர்தலுக்காக போராடி வருவதையும் எங்களால் பார்க்கமுடிகிறது. எங்கள் பிரதமர் மோடி குறித்த சில பொய்யான தகவல்களை நீங்கள் பேசி உள்ள நிலையில் ஒரு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக அதற்கு பதில் அளிக்க வேண்டிய இடத்தில் நான் இப்பொழுது இருக்கிறேன். 

எங்கள் பாரத பிரதமர் பெரும் சக்தியோடு இந்தியாவை உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் இந்த நேரத்தில், நடக்கவிருக்கும் ஜி 20 மாநாட்டில் முக்கிய நாடாக இந்தியா மாறி இருக்கிறது. ஆகையால் இந்த காலகட்டத்தில் நீங்கள் கூறும் பொய்களுக்கு அவர் பதில் அளிக்க போவதில்லை. மோடியின் அமைச்சரவையில் இப்பொது இருக்கும் 79 அமைச்சர்களில் 20 அமைச்சர்கள் SC மற்றும் ST வகுப்பை சேர்ந்தவர்கள்.

7 பெண் அமைச்சர்கள், 5 அமைச்சர்கள் மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர்கள், இதிலிருந்து நீங்கள் சொல்வதை செய்யும் தலைவர் அல்ல என்பது தெரிகின்றது. நீங்கள் பிரச்சாரம் செய்வது ஒன்று, ஆனால் செயல்படுத்துவது ஒன்று. அவர்களுக்கு நீங்கள் அரசியல் அதிகாரத்தை, அரசியல் பலத்தை தருவதில்லை, பின் ஏன் இந்த நாடகம் என்று பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.