Jul 27, 2022, 3:38 PM IST
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. வாணியம்பாடிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வட்டாட்சியர் நடனமாடி வரவேற்றார். அவருடன் பள்ளி மாணவர்களும் நடனமாடி உற்சாகமாக ஜோதியை வரவேற்றனர்