Sep 28, 2019, 6:42 PM IST
தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவாக ‘திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெறுகிறது இது இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத ஒரு வைபவம் ஆகும்.
திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு சமர்ப்பிக்க,திருக்குடை ஊர்வலம் நடத்தப்படும் அந்த வகையில் சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் அக்.1ம் தேதி துவங்குகிறது.
திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லுமிடமெல்லாம் மங்களம் பெருகும், திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானின் அருளால் வறுமை நீங்கும், நோய், நொடி விலகும் என்பது நம்பிக்கை.