திருச்சியில் கொட்டி தீர்த்த மழை; தீபாவளியை முன்னிட்டு கடைக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி!!

Oct 22, 2022, 4:28 PM IST

வங்கக்கடலில் ஆழ்ந்த உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு, கிழக்கு வங்கக்கடலில் 24ம் தேதி புயல் சின்னமாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சியில் இன்று மழை கொட்டி தீர்த்தது

மேலும் படிக்க:இன்று 6 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

திருச்சியில் இன்று மதியம் மழை கொட்டி தீர்த்த காரணத்தால், தீபாவளியை முன்னிட்டு பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கவலை அடைந்தனர்.