பொதுமக்கள் அதிருப்தி.. கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்ட தங்கம் விலை!!வீடியோ

Aug 6, 2019, 6:16 PM IST

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம் தொட்டிருக்கிறது. ஜூலை மாதம் இந்தியா இறக்குமதி செய்துள்ள தங்கத்தின் அளவு 39.66 டன். கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் 88.16 டன். இதேபோல இந்தியாவிலிருந்து தங்கம் ஏற்றுமதி செய்யப்படுவதும் 42 சதவீதம் வீழ்ச்சி கண்டு  இருக்கிறது. ஜூன் 2019ல் இந்தியாவின் தங்க ஏற்றுமதி மதிப்பு 1.71 பில்லியன் டாலர் தங்கத்துக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் மாதமும் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டைவிடக் குறைவாகவே இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின மீதான இறக்குமதி வரியை 10  யில்  இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதாக அறிவித்தார். அதிலிருந்து தங்கத்தின் விலை படுவேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஓரே நாளில் கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்தும், சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து உள்ளது .இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 28 ஆயிரத்தை நெருங்க உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் தங்கத்தின் தேவை செப்டம்பர் 2019 மாதத்தில் குறைந்துவிடும் என உலக தங்க கவுன்சில் கூறுகிறது.