அதிகாரம் மிக்க கிராம சபைகள் ! கிராமங்களைப் போற்றுவோம் !!

Aug 15, 2019, 9:09 AM IST

ஒரு கிராம சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் என்பது மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு நிகரானது. உச்சநீதிமன்றம் கூட கிராம சபைக்கூட்ட தீர்மானத்தை நிராகரிக்க முடியாது என்பதே இக்கூட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சம். மற்றபடி, கிராம சபைக்கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு கலெக்டரே நினைத்தாலும் தடை விதிக்க முடியாது.

கிராம சபைக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை நிறைவேற்ற வேண்டும் என்பது சட்டம். ஆனால், நடைமுறையில் பல சட்டங்களும், விதிகளும் நீர்த்துப்போனதுபோல் கிராம சபைக்கூட்ட தீர்மானங்களும் கிடப்பில் போடப்படுகின்றன என்பதே நிதர்சனம்.