கோத்தகிரி அருகே  இரு குட்டிகளை முதுகில் சுமந்து வந்த கரடி!

கோத்தகிரி அருகே இரு குட்டிகளை முதுகில் சுமந்து வந்த கரடி!

Published : Jun 30, 2022, 06:34 PM IST

நீலகிரி மாவடம், கோத்தகிரி அருகே  இரு குட்டிகளை முதுகில் சுமந்தவாறு  சாலையில் நடந்து வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கன்னிகா தேவி குடியிருப்பு பகுதி தேயிலை தோட்டத்தில் சில பெண்கள் தேயிலையை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இரு குட்டிகளை தனது முதுகில் சுமந்தவாறு  தாய் கரடி ஒன்று சாலையில் நடந்து வந்தது. சிறிது தூரம் சாலையில் நடந்து வந்த அந்த கரடி அங்குமிங்கும் பார்த்தது. அப்போது தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்வதை பார்த்த அந்த கரடி ,தனது குட்டிகளுடன் பாதுகாப்பாக தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் நாவல் பழம் சீசன் துவங்க இருப்பதால் கரடிகள் நாவல் பழங்களைத் தேடி கிராம பகுதிக்குள் நடமாடி வருவதாக வனத்துறையினர்  தெரிவித்துள்ளனர். அவ்வாறு வரும் கரடிகளை யாரும் அச்சுறுத்தக் கூடாது என வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

08:35கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
09:03ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
08:23கஜானா காலி.! இருந்தாலும் விஜய் உங்களுக்கு செய்வார்.! உறுதி அளித்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா.!
02:24சென்னை தூய்மைப் பணியாளர்கள் 15 நாள் போராட்டம்; ஊதிய உயர்வு கோரிக்கையை கேட்க அமைச்சர்கள் சந்திப்பு!
03:52தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !
06:15எதிர்க்கட்சியின் குரலை நசுக்கப் பார்க்கிறீர்கள்!" – சட்டப்பேரவையில் எடப்பாடி அதிரடி பேச்சு !
05:19116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
05:46எங்கள் தலைவருக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!" – பேரவையில் சீறிய ஆதவ் அர்ஜுனா!
03:31வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !
03:54முதல்வர் ஏன் பாஜக குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார் ? சட்டப்பேரவைலயில் உதயநிதி கேள்வி !