Sep 28, 2022, 5:45 PM IST
தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நவராத்திரி கொலு கண்காட்சியை ஊரக தொழில்துறை அமைச்சர் த. மோ. அன்பரசு ஏற்றி துவக்கி வைத்தார். பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை அரங்கில் தமிழக அரசு சார்பில் நவராத்திரி கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மூன்றாக பிரிகிறதா சென்னை? சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் முடிவு என்ன?
இந்த கண்காட்சியினை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவருக்கு பூம்புகார் கைத்திறன் மற்றும் பணியாளர் முன்னேற்ற கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை பார்வையிட்டார். அதில் சிவன், முருகன், அம்மன், பெருமாள், பிள்ளையார், கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி திருவள்ளூவர், பாரதியார், பெரியார், கருணாநிதி போன்றவர்களின் சிலைகளும் கொலுவில் இடம்பெற்றிருந்தன.