Oct 27, 2022, 5:51 PM IST
மதுரை ரயில் நிலையம் எதிரே டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப மையத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இணைந்து துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது; " வட மாநிலத்தை விட தென்னகத்தில் தமிழ்நாட்டை மையமாக வைத்து புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க:நாய்,பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது..! செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை
அதிலும் தென் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மதுரையில் ஐடி பார்க், சிப்காட் ஆகிய அமைக்கப்படவுள்ளது. தென்னகத்தை நோக்கி தொழில் முதலீடுகள் வர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் கடந்த ஆண்டில் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தென் தமிழகத்தை மையப்படுத்தி புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதன் மூலம் புதிய வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்று தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், டி.வி.எஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க:வாரிசு படத்தில் உண்மையில் உதயநிதி தான் நடித்து இருக்க வேண்டும்.. பங்கமாய் கலாய்க்கும் செல்லூர் ராஜு.!