அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பலியான வீரர் !! ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

Jan 16, 2025, 1:30 PM IST

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நவீனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.