Jul 15, 2022, 8:09 PM IST
சென்னையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை, ஒரு நகைக்கடை உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பழிக்குப்பழி செயலாக மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள நகைக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததாக தெரிகிறது. அப்போது, கடை உரிமையாளருக்கும், மாநகராட்சி அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நகைக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.