காட்டு காட்டுனு காட்டிய மழை.. தமிழகத்தில் நீடிக்கும் என அறிவிப்பு வீடியோ..!

Nov 23, 2019, 1:35 PM IST

தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை வந்தது. அதன்பிறகு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் அடுத்தடுத்து உருவாகிய புயல்களால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் தீவிரம் வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தற்போது மீண்டும் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக முதல் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்று மேலடுக்கு சுழற்சியால் அடுத்து வரும் சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்திருந்தது.

 சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் பெய்ய தொடங்கிய கனமழை தற்போது வரை நீடிக்கிறது. வேளச்சேரி,கிண்டி, அண்ணா சாலை, தாம்பரம் உட்பட நகரின் பல்வேரின் இடங்களிலும் மழை பெய்து வருகிறது.  சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதே போன்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.